தென்காசி
பொதுக்குழு கூட்டம்
|த.மு.மு.க, மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
புளியங்குடி:
புளியங்குடி நகர முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சி நகர பொதுக்குழு கூட்டம் நகர செயலாளர் சமதானியா சாகுல் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, மாவட்ட துணை தலைவர் அப்துல் ரகுமான், த.மு.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் மஜீத், ம.ம.க. நகரச் செயலாளர் மட்டன் செய்யது, நகராட்சி கவுன்சிலர் முகைதீன் அப்துல் காதர், நகர பொருளாளர் முகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான உறுப்பினர் அட்டைகளை ம.ம.க. மாவட்ட செயலாளர் பசீர் ஒலி வழங்கினார். கூட்டத்தில், இமாம் இப்னு தைமியா இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் த.மு.மு.க.-ம.ம.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.