< Back
மாநில செய்திகள்
பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு
மாநில செய்திகள்

பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Jan 2023 8:04 AM IST

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: "பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம் " என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்