ராமநாதபுரம்
வடமாநில இளைஞர்கள் விவரம் சேகரிப்பு
|வடமாநில இளைஞர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் வடகாடு கிராமத்தில் இருந்து பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் உள்ள ஓட்டல், தங்கும் விடுதி, தனியார் நிறுவனம், கட்டிட காண்டி ராக்டர்கள், ஐஸ் கம்பெனி, மீன் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது பெயர் புகைப்படம், ஆதார் அட்டை, செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை அந்தந்த ஓட்டல் தங்கும் விடுதி, தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மூலம் வருகிற 15-ந் தேதிக்குள் ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் ராமேசுவரம் தனிப் பிரிவு போலீசாரால் தங்கும் விடுதி, ஓட்டல், தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்களின் பெயர், முகவரி, ஆதார் அட்டை, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.