< Back
மாநில செய்திகள்
டீ கடையில் கியாஸ் கசிந்தது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

டீ கடையில் கியாஸ் கசிந்தது

தினத்தந்தி
|
24 Dec 2022 12:15 AM IST

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு: டீ கடையில் கியாஸ் கசிந்தது பயணிகள் அலறியடித்து ஓட்டம்

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் உள்ள சமையல் பயன்பாட்டுக்கான சிலிண்டரில் இருந்து நேற்று மாலை திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது. அப்போது கியாஸ் வாடை பஸ் நிலையம் முழுவதும் பரவியதை தொடர்ந்து அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏதோ அசம்பாவித சம்பவம் நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓட தொடங்கினார்கள்.

பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசு பஸ்களை சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கொண்டு சென்று டிரைவர்கள் நிறுத்தினார்கள். இந்த நிலையில் டீ கடைக்காரர் ஈர சாக்கை கொண்டு கியாஸ் சிலிண்டரின் மேல் பொதிந்து பின்னர் அதை பத்திரமாக வெளியே எடுத்து வந்து கியாஸ் கசிவை நிறுத்தினார். இதன் பிறகே அங்கு நின்றிருந்த பயணிகள் மற்றும் பஸ்ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். டீ கடையில் உள்ள சமையல் சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்