< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் தொழிற்சாலைகளில் இருந்து வாயு கசிவு - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
மாநில செய்திகள்

திருவொற்றியூரில் தொழிற்சாலைகளில் இருந்து வாயு கசிவு - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
17 July 2022 2:45 AM IST

சென்னை திருவொற்றியூரில் தொழிற்சாலைகளில் ஏற்படும் வாயு கசிவை கண்டறிய காற்று மாதிரி சேகரிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை திருவொற்றியூர் மணலில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கடந்த ஒரு மாதமாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் காற்றில் கலந்துள்ள மாசு துகள்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் இரண்டு நாட்களுக்குப் பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்