< Back
மாநில செய்திகள்
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு...!

கோப்புப்படம்

மாநில செய்திகள்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு...!

தினத்தந்தி
|
1 Nov 2023 7:37 AM IST

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 101.50 உயர்ந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை, வணிக பயன்பாடு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 1,898 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.1,999 .50 ஆக உயர்ந்துள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50-க்கு விற்பனையாகிறது.

மேலும் செய்திகள்