விருதுநகர்
கியாஸ் சிலிண்டர் கசிவால் வீட்டில் தீப்பிடித்தது; கணவன்-மனைவி படுகாயம்
|வத்திராயிருப்பு அருகே சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் ஏற்பட்ட தீயில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் ஏற்பட்ட தீயில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.
தம்பதி காயம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் செம்மபட்டி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது56). இவருடைய மனைவி பழனியம்மாள்(52). இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை பெரியசாமி வீட்டில் இருந்த கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார்.
அப்போது திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த தீ வேகமாக பரவியதால் அவரும், வீட்டில் இருந்த பழனியம்மாளும் காயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.