< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
திண்டிவனம் அருகே கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|21 Oct 2023 12:45 AM IST
திண்டிவனம் அருகே கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் குமார் (வயது 45). டிரைவர். இவருடைய மனைவி நேற்று முன்தினம் வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கியாஸ் சிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் மற்றும் அவரது மனைவியும் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு துறையினர் கியாஸ் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.