< Back
மாநில செய்திகள்
எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
28 Dec 2022 12:39 AM IST

எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நாளை(வியாழக்கிழமை) மதியம் 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்