< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
|24 Jan 2023 12:30 AM IST
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.
அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணியளவில் உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.