< Back
மாநில செய்திகள்
பெருமாள் கோவிலில் கருட சேவை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பெருமாள் கோவிலில் கருட சேவை

தினத்தந்தி
|
18 Oct 2022 1:52 AM IST

வள்ளியூர் பெருமாள் கோவிலில் கருட சேவை நடந்தது.

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே மடப்புரம் சீனிவாசகப்பெருமாள் கோவிலில் கருட சேவை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சன நீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருவீதி உலாவில், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்