< Back
மாநில செய்திகள்
கரிசன்விளைமுப்புடாரி அம்மன் கோவில் ஆடித்திருவிழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கரிசன்விளைமுப்புடாரி அம்மன் கோவில் ஆடித்திருவிழா

தினத்தந்தி
|
7 Aug 2023 6:45 PM GMT

கரிசன்விளை முப்புடாரி அம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடங்கியது.

திருச்செந்தூர்:

காயாமொழி அருகேயுள்ள கரிசன்விளை முப்புடாரி அம்மன் கோவில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளான நேற்று ஸ்ரீமன் நாராயண சுவாமிகோவிலில் அலங்கார பூஜை நடந்தது. 2-ம் நாளான நேற்று முப்புடாரி அம்மன்கோவிலில் இரவு 7.30 மணிக்கு வருசாபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு புலவர் ராதாகிருஷ்ணன் குழுவினரின் வில்லிசை கச்சேரி நடந்தது.

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு சுனையில் இருந்து புனிதநீர் எடுத்து வருதல், காலை 8 மணிக்கு வெற்றிவிநாயகர் சன்னதியில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக கோவில் சென்றடைகிறது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கொடை தொடங்குகிறது. மதியம் 1 மணிக்கு நையாண்டி மேளத்துடன் சுவாமி வீதிவலம் நடைபெறும். இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி வீதி உலா வருதல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு பெண்கள் முளைப்பாரி ஊர்வலமும், இரவு 10 மணிக்கு கரகாட்டம், குறவன், குறத்தி ஆட்டமும் நடக்கிறது. நாளை மறுநாள் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

மேலும் செய்திகள்