< Back
மாநில செய்திகள்
குன்றக்குடி அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சிவகங்கை
மாநில செய்திகள்

குன்றக்குடி அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
11 July 2022 11:13 PM IST

பிறந்த நாளையொட்டி குன்றக்குடி அடிகளாரின் சிலைக்கு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

காரைக்குடி,

குன்றக்குடி அடிகளாரின் 98-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்றது. விழாவில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் குன்றக்குடி அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், கல்லல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன், துணைத்தலைவர் நாராயணன் தி.மு.க. தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன், கல்லல் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் சண்முக வடிவேல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மருதுபாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு மங்கை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்