மதுரை
மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவிப்பு
|மருது பாண்டியர் சிலைக்கு கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அவனியாபுரம்
மருது பாண்டியர்
மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர் குருபூஜை நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்றது. புறநகர் அ.தி.மு.க. கிழக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.. நிகழ்ச்சியில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., திருப்பரங்குன்றம் பகுதி மேற்கு 97-வது வட்ட செயலாளர் ராஜ்குமார், பகுதி துணைசெயலாளர் தபால்பாண்டி வட்ட செயலாளர்கள் பாலா, திருநகர் பாலமுருகள், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் மருதுபாண்டியர் இளைஞர் சங்கம் செய்திருந்தது.
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
மாமன்னர் மருதுபாண்டியரின் குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரின் ஆணைக்கிணங்க மாநில மகளிரணி செயலாளர் சுந்தரசெல்வி ஒச்சாதேவர் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் மாநில இளைஞரணி துணை தலைவர் செந்தில்ராஜ்தேவர், புறநகர் மாவட்ட செயலாளர் குட்டி ஞானசீலன், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் முத்துவேல், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் வில்லூர் பிச்சை, மதுரை கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டி கோவில் வினோத், மதுரை கிழக்கு மாவட்ட தொண்டரணி செயலாளர் குன்னத்தூர் கல்லாணை, ஐ.டி.விங் கதிர் தேவன், ஆவல்சூரம்பட்டி ஈஸ்வரன், சமத்துவபுரம் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு யாதவ மகாசபை
மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும், 85-வது வார்டு அ.தி.மு.க. வட்ட செயலாளருமான ஜெயக்குமார், மாநில துணை தலைவர்கள் மணிமாறன், சுப்பையா, மாநில செயலாளர்கள் மதுரை கருணாநிதி, சுடலை, செல்லையா மற்றும் அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் வில்லாபுரம் ஆர்.கே.ரமேஷ் மற்றும் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் கந்தவேல், மாவட்ட செயலாளர் ராஜேந்திர பிரசாத், பொருளாளர் வெங்கடாச்சலம், துணை செயலாளர் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சுந்தர், மாயக்கண்ணன், பூதக்குடி செல்வமணி, எஸ்.எஸ்.காலனி தங்கப்பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.