< Back
மாநில செய்திகள்
காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

தினத்தந்தி
|
3 Oct 2022 2:57 AM IST

திருச்சியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காந்தி பிறந்த நாள் விழா

காந்தியடிகளின் 154-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல் காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சி அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள மகாத்மா காந்தி நினைவு ஸ்தூபியில் மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மாலை அணிவிப்பு

மேலும் காந்தி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும், வியாபாரிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் மகாத்மா காந்தி சிலைக்கு எஸ்.கதிரவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முசிறி கைகாட்டியில் காந்தி படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் காமராஜர் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக அவருடைய படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்