< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

தினத்தந்தி
|
30 July 2022 8:32 PM IST

தி.மு.க. நகர செயலாளராக சுப்ராயலு நியமனம் செய்யப்பட்டதால் கள்ளக்குறிச்சியில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவராகவும், தி.மு.க. நகர செயலாளராகவும் சுப்ராயலு இருக்கிறார். இவரை மீண்டும் தி.மு.க. நகர செயலாளராக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இதையடுத்து நகர செயலாளர் சுப்ராயலு நிர்வாகிகளுடன் சென்று மந்தைவெளியில் உள்ள அண்ணா, பெரியார் சிலைக்கும், கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தொரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் அப்துல்கலீல், துணை செயலாளர்கள் அப்துல் ரசாக், அன்பு செல்வன், உமா, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் விஜயலட்சுமி, சதீஷ்குமார், செந்தில்குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் லியாகத்அலி, சண்முகம், முன்னாள் நகர செயலாளர் அபூபக்கர், நகர மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், ஷமீம்பானு அப்துல்ரசாக், மீனாட்சி கேசவன், ரமேஷ், அஸ்வின், விமலா, தேவராஜ், செல்வம் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்