< Back
மாநில செய்திகள்
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாளுக்கு புஷ்ப கொண்டை அலங்காரம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாளுக்கு புஷ்ப கொண்டை அலங்காரம்

தினத்தந்தி
|
1 Jan 2023 12:34 AM IST

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாளுக்கு புஷ்ப கொண்டை அலங்காரம் செய்யப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது.

மதனகோபால சுவாமி கோவில்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 9-வது நாளான நேற்று மாலையில் பெருமாள் புஷ்ப கொண்டை அலங்காரத்தில் செங்கோலுடன் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் பெருமாள் நாச்சியார் திருக்கோலம் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியளவில் நடக்கிறது. இரவு 7.30 மணியளவில் பெருமாள் வெள்ளி கருட சேவையில் வீதி உலா வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர். மேலும் அன்றைய தினத்தில் இருந்து ராப்பத்து உற்சவம் தொடங்கி, வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது. அந்த 10 நாட்களில் இரவு 7 மணியளவில் கோவில் பிரகார உற்சவம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்