< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
|23 Oct 2023 12:15 AM IST
திருக்கருகாவூர்கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா, நாளை நடக்கிறது,
மெலட்டூர்:
பாபநாசம் தாலுகா திருக்கருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்மன் சமேத முல்லைவனநாதர் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று(திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்பரட்சாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி அன்று மாலை சந்திரசேகரசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சிச்சியும். இரவு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ராணி மேற்பார்வையில் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.