< Back
மாநில செய்திகள்
குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

தினத்தந்தி
|
22 Sept 2023 1:18 AM IST

அருப்புக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

திறந்தவெளியில் குப்பை

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி முத்தரையர் நகர் பகுதியில் இருந்து புறவழிச்சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் சாலையோரம் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுகிறது.

இதனால் அந்த பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாய நிலை நிலவுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

பாளையம்பட்டி முத்தரையர் நகர் பகுதியில் இருந்து புறவழிச்சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் சாலையோரம் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுகிறது.

இந்த பகுதியில் பிளாஸ்டிக்கழிவுகள், கட்டிடக்கழிவுகள் குவியல், குவியலாக கிடக்கின்றன. இந்த குப்பைகளை நாய்கள், மாடுகள் கிளறி ஆங்காங்கே வீசி சென்று விடுகின்றன. மேலும் அப்பகுதியை கடந்து செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் குப்பையினால் கொசுக்கள் உற்பத்தி ஆகுவதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அங்கு குப்ைப கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்