< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
வைப்பாற்றில் கொட்டப்படும் குப்பைகள்
|18 Sept 2023 1:41 AM IST
வைப்பாற்றில் கொட்டப்படும் குப்பைகளை தடுக்க வேண்டும்.
ஆலங்குளம்,
ஆலங்குளம்- சுண்டங்குளம் கிராமத்திற்கும் இடையே வைப்பாறு செல்கிறது. இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தி ஆகி வெம்பக்கோட்டை அணைக்கு தண்ணீரை கொண்டு செல்கிறது. இந்த ஆற்றில் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. அதேபோல ஆற்றில் கருவேல மரங்கள் முளைத்து உள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் செல்ல தடைப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றவும், கருவேல மரங்களை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.