< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அமராவதி ஆற்றில் குப்பைகள் அகற்றம்
|20 Aug 2023 12:15 AM IST
அமராவதி ஆற்றில் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டது.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மை பணியை நடத்தினர்.இதற்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது கரூர் அமராவதி ஆற்று பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். முன்னதாக லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அனைவரும் தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.