செங்கல்பட்டு
கேளம்பாக்கத்தில் குப்பை அள்ளும் வாகனத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் பலி
|கேளம்பாக்கத்தில் குப்பை அள்ளும் வாகனத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் விஜய் (வயது 20) கேளம்பாக்கம் சாத்தான்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து குப்பைகளை ஏற்றிக்கொண்டு கேளம்பாக்கம் சுடுகாடு அருகில் காலியிடத்தில் கொட்டியுள்ளனர்.
பேட்டரி குப்பை வாகனத்தை ஓட்டி வந்த விஜய் டிரைவர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தின் வெளியே வலது புறத்தில் உள்ள லிவரை தூக்கியுள்ளார்.
குப்பை கழிவுகள் அதிக அளவில் இருந்ததால் திடீரென கீழே இறங்கி விஜய் கழுத்தில் விழுந்தது. இதில் விஜய் வாகனத்தில் சிக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்..
விஜய் பணிக்கு சேர்ந்து 20 நாட்கள் ஆன நிலையில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு கவன குறைவாக பணியில் ஈடுபட்டதாகவும் ஹைட்ராலிக் எந்திரத்தை பயன்படுத்தியதாகவும் இதனால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.