தர்மபுரி
கரகதஅள்ளி ஊராட்சி செயலாளர் பணி நீக்கம்
|நிதி முறைகேடு புகாரை தொடர்ந்து கரகதஅள்ளி ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கலெக்டர் சாந்தி பிறப்பித்துள்ளார்.
பாலக்கோடு:-
நிதி முறைகேடு புகாரை தொடர்ந்து கரகதஅள்ளி ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கலெக்டர் சாந்தி பிறப்பித்துள்ளார்.
ஊராட்சி செயலாளர்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கரகதஅள்ளி ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வந்தவர் கடமடையை சேர்ந்த வேலு (வயது 40). இவர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது மாவட்ட நிர்வாகத்திற்க்கு புகார்கள் சென்றன.
இது குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இந்தநிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஊராட்சி செயலாளர் வேலு, நிதி முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை கலெக்டரிடம் ெகாடுக்கப்பட்டது.
பணி நீக்கம்
பின்னர் கலெக்டர் சாந்தி கரகதஅள்ளி ஊராட்சி செயலாளர் வேலுவை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
நிதி முறைகேட்டால் ஊராட்சி செயலாளரின் பணிநீக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.