தர்மபுரி
தர்மபுரியில் கட்சிகள், அமைப்பு சார்பில்காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
|தர்மபுரியில் கட்சிகள், அமைப்பு சார்பில் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
காந்தி பிறந்தநாள்
தர்மபுரியில் பல்வேறு கட்சிகள் சார்பில் காந்தி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. எஸ்.வி. ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தர்மபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காமராஜர் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், தேர்தல் பணிக்குழு மாவட்ட தலைவர் வாசுநாயுடு, மாவட்ட பொறுப்பாளர்கள் சின்னசாமி, கார்த்திகேயன், தகடூர் தமிழன், நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கடேஷ், நகர தலைவர் குமார், முன்னாள் நகர செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையத் கலீம் உள்பட கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கி காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் காமராஜர் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் வடிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், ஜெய்சங்கர், சண்முகம், வட்டார தலைவர்கள் மணி, காமராஜ், ஞானசேகர், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி சிவலிங்கம், நிர்வாகிகள் ரங்கநாதன், தளபதி செந்தில், பெருமாள் கவுண்டர், முருகன், நடராஜன், ஹரி கிருஷ்ணன், முனிரத்தினம், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரதமாதா சிந்தனை குழு
பாரத மாதா மக்கள் சிந்தனை குழு சார்பில் காந்தி பிறந்தநாள் விழா காமராஜர் நினைவு நாள் தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது. குழு தலைவர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சவுந்திரபாண்டியன் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் வினோத் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் திருஞானம், சத்யநாராயணன் ஆகியோர் பாரதமாதா சிலைக்கும், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், ரோட்டரி சங்க துணை கவர்னர் விக்ரமன் ஆகியோர் காந்தி சிலைக்கும், வினோத் குமார், சரவணன், கிருஷ்ணன் ஆகியோர் காமராஜர் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சட்ட ஆலோசகர் ரமேஷ் குமார், நிர்வாகிகள் சசிகுமார், சரவணகுமார், சஞ்சீவிராயன், கார்த்திகேயன், ராஜா கிருஷ்ணன், சோழ பாண்டியன், பிறைசூடன், முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.