< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீசார் விசாரணை
|20 Sept 2024 12:51 PM IST
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் இன்று வழக்கமான சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது, நடைமேடை அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கேட்பாரற்று ஒரு டிராலி பேக் கிடந்தது.
அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் 14 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து, கைப்பற்றப்பட்ட கஞ்சாவை ரெயில்வே போலீசார் பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.