< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவர் கைது
தேனி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவர் கைது

தினத்தந்தி
|
5 Oct 2023 6:15 AM IST

கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கேரள மாநிலத்திற்கு கஞ்சா கடத்தி செல்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா (பொறுப்பு) தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் கம்பம்மெட்டு மலைப்பாதை 3-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சாக்குபையுடன் சந்தேகப்படும்படி வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சாக்குபையில் 8 கிலோ கஞ்சா கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சின்னக்கட்டளையை சேர்ந்த கணேசன் (வயது 46) என்பதும், கேரளாவுக்கு கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்