< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சேலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை - 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை
|14 March 2024 8:41 PM IST
சேலத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் 2 பெண்கள் 3 ஆண்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைப் பார்த்து 3 ஆண்களும் தப்பியோடினர். இதையடுத்து 2 பெண்களையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இந்த விசாரணையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி சின்னாவிடம் விற்பனை செய்வதற்காக அவர்கள் சேலத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தப்பியோடிய சின்னா உள்ளிட்ட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.