திருச்சி
கஞ்சா விற்றவர் 351 நாட்கள் சிறையில் அடைப்பு
|கஞ்சா விற்றவர் 351 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கிரண் (வயது 34) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டரால் பிணையப்பட்ட அறிக்கையின்படி, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவர் ஒரு வருடகாலத்துக்கு பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன் என்றும், கஞ்சா விற்கும் குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்றும் நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். ஆனால் அந்த உறுதிமொழியை மீறி மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவர் நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்ற செயல்கள் புரியாமல் இருந்த காலத்தை தவிர, மீதியுள்ள 351 நாட்களை சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.