< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கஞ்சா விற்றவர் கைது
|18 April 2023 2:58 AM IST
நெல்லையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாநகர மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாளையங்கோட்டையை சேர்ந்த பாலு (வயது 32) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 12 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.