< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கஞ்சா விற்றவர் கைது
|1 Nov 2022 12:32 AM IST
கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வி.கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வி.கைகாட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வி.கைகாட்டி முத்துவாஞ்சேரி சாலையில் உள்ள தளபதி(வயது 42) என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தளபதி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.