< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்றவர் கைது
தேனி
மாநில செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

தினத்தந்தி
|
7 Sept 2022 10:51 PM IST

கம்பத்தில், கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கம்பம் கோம்பைசாலை தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக, கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் ராஜா (வயது 40) என்பவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். இதனைக்கண்ட போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்