< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்றவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

தினத்தந்தி
|
26 Aug 2023 1:33 AM IST

பரப்பாடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் பரப்பாடி அருகே வேப்பங்குளம் பகுதியில் ரோந்து வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகத்துக்கிடமான ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வள்ளியூர் பாத்திமா சர்ச் தெருவில் உள்ள இசக்கியப்பன் மகன் வீரமணி (வயது 37) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்