< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கஞ்சா விற்றவர் கைது
|7 July 2023 12:15 AM IST
கஞ்சா விற்றவர் கைது
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று காலையில் இறச்சகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 2 ேபர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவரை போலீசார் பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் 42 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் ஈசாந்திமங்கலம் மேலூரை சேர்ந்த நிஷாந்த் (வயது24) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து நிஷாந்தை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய பழவூரை சேர்ந்த கண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.