< Back
மாநில செய்திகள்
புழல் சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
சென்னை
மாநில செய்திகள்

புழல் சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்

தினத்தந்தி
|
31 March 2023 1:16 PM IST

புழல் சிறையில் கைதியிடம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுராந்தகத்தை சேர்ந்தவர் மணி(வயது 20). இவர், திருட்டு வழக்கில் மேல்மருவத்தூர் போலீசாரால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவரை நேற்று முன்தினம் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர். புழல் சிறை காவலர்கள் கைதி மணியை ேசாதனை செய்தனர். அதில் அவர், 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இது பற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதி மணிக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்