< Back
மாநில செய்திகள்
கஞ்சா போதையில் கத்தியுடன் போலீஸ்காரரை விரட்டிய கும்பல் - வீடியோ  வைரல்
சென்னை
மாநில செய்திகள்

கஞ்சா போதையில் கத்தியுடன் போலீஸ்காரரை விரட்டிய கும்பல் - வீடியோ 'வைரல்'

தினத்தந்தி
|
23 Aug 2023 7:48 AM IST

பூந்தமல்லி அருகே கஞ்சா போதையில் கத்தியுடன் போலீஸ்காரரை விரட்டிய கும்பலின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

பூந்தமல்லி,

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் போது, அங்கு கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர்கள் சிலர், அப்பகுதியில் சிலரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், ரோந்து பணியில் இருந்த போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா போதையில் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் கையில் கத்தியுடன் ஒரு போலீஸ்காரரை மிரட்டும் தொணியில் விரட்டினர்.

இதில் கையில் தடி வைத்தருந்த அந்த போலீஸ்காரர் அச்சமடைந்து அங்கிருந்து பின்னோக்கி ஓடினார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவத்தையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டி கஞ்சா போதையில் அட்டகாசம் செய்ததாக சபரி, சூர்யா, சந்தோஷ் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை பிடித்து கைது செய்தனர்.

போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய இந்த கும்பல் மாங்காடு, பெரியகொளுத்துவான் சேரி, கோவூர் ஆகிய பகுதிகளில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரை சிறையிலும், 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்