< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருவாரூர்
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
28 Dec 2022 12:30 AM IST

முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து, 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து, 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம் கீழவாடியக்காடு கிராமத்தில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் தேவதாஸ் (வயது23) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

பறிமுதல்

இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் தேவதாசை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்