< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|18 April 2023 2:16 AM IST
கஞ்சா விற்ற பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி கோமதி (வயது 52). இவர் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உடையவர் என்பதாலும், இவர் மீது கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கோமதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள கோமதியிடம் நேற்று இரவு போலீசார் வழங்கினார்கள்.