< Back
மாநில செய்திகள்
புகையிலை, கஞ்சா கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புகையிலை, கஞ்சா கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
7 Sept 2023 12:40 AM IST

புகையிலை, கஞ்சா கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மை தலைமையில் போலீசார் மூக்கம்பட்டி கடைவீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் புகையிலை, கஞ்சா கடத்தி வந்த ஆலங்குடி கே.வி.எஸ். தெருவை சேர்ந்த பாலு என்கிற பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 28 கிலோ புகையிலை மற்றும் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ேபாலீசார் பாலகிருஷ்ணனை (வயது 36) ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்ேபரில், பாலகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். தொடர்ந்து பாலகிருஷ்ணனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை காண்பித்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்