< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|1 Nov 2022 1:02 AM IST
கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக ஆறுமுகம் என்பவர் எடமலைப்பட்டிபுதூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், ஆறுமுகம் மீது கஞ்சா விற்றதாக ஏற்கனவே 5 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் தொடர்ந்து கஞ்சாவிற்பனையில் ஈடுபடுவார் என்பதால் அவரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள ஆறுமுகத்திடம் போலீசார் வழங்கினர்.