< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|15 Oct 2023 12:18 AM IST
கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அருகே இளங்குடிப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் என்கிற சுந்தரேகாபாலன் (வயது 58) கடந்த ஆகஸ்டு மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமயம் மேலதேமுத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் என்கிற குண்டுகார்த்திக்கை (31) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கார்த்திகேயன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து கார்த்திகேயன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் போலீசார் கையெழுத்து பெற்றனர். அதன்பின் அவரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.