< Back
மாநில செய்திகள்
கொள்ளை வழக்கில் கைதான ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
மாநில செய்திகள்

கொள்ளை வழக்கில் கைதான ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
10 Aug 2022 4:41 AM IST

கொள்ளை வழக்கில் கைதான ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி கோட்டை சஞ்சீவி நகர் நேரு தெருவில் உள்ள டிராவல்ஸ் உரிமையாளரின் வீட்டில் கத்தியை காட்டி நகை மற்றும் ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்தை கொள்ளையடித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கார்த்திக் என்ற கார்த்திகேயன்(வயது 25), சுதிர் என்கிற கதிரேசன்(20) ஆகியோரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் இவர்கள் மீது சத்திரம் பஸ் நிலைய கடையில் நின்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஒரு வழக்கும், பாலக்கரை மற்றும் கொள்ளிடம் போலீஸ் நிலைய பகுதியல் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்குகள் உட்பட 3 வழக்குகளும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே, இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவந்ததால், கோட்டை இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், அவர்கள் 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்