< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|4 Oct 2023 12:26 AM IST
கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர் மாவட்டம், குளத்தூர் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில், அதே ஊரைச்சேர்ந்த சுரேஷை(வயது 36) போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள சுரேஷிடம், போலீசார் நேற்று முன்தினம் வழங்கினர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், மருவத்தூர் ஏட்டு வயலட் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.