< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|1 Sept 2023 2:28 AM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலைய பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, நடுவக்குறிச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று பாலசுப்பிரமணியனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் நேற்று வழங்கப்பட்டது