< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
கொலையாளிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|13 July 2023 12:27 AM IST
கொலையாளிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி கோட்டை காவேரி பாலத்தின் கீழே ஒருவரை செல்போன் மற்றும் பணத்தை திருடியதற்காக கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளிகள் வடிவேல் (வயது 22), சரத்குமார் (27) உள்பட 5 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தநிலையில் வடிவேல், சரத்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா, அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள வடிவேல், சரத்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் வழங்கப்பட்டது.