< Back
மாநில செய்திகள்
4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
2 March 2023 10:50 PM IST

வழிப்பறி வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

திண்டுக்கல் மேட்டுபட்டியை சேர்ந்த நந்தகுமார் (வயது 26), வேடப்பட்டியை சேர்ந்த பாலாஜி (26), குடைப்பாறைபட்டியை சேர்ந்த பிரபாகரன் (27), கக்கன்நகரை சேர்ந்த ரமேஷ்குமார் (21) ஆகியோர் கடந்த மாதம் பாலம் ராஜக்காபட்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ரெட்டியார்சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த 4 பேரையும் ரெட்டியார்சத்திரம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்