< Back
மாநில செய்திகள்
4 பேர் மீது குண்டர் சட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

4 பேர் மீது குண்டர் சட்டம்

தினத்தந்தி
|
10 July 2023 1:57 AM IST

4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பொன்மலைப்பட்டி:

அரிவாளால் வெட்டினர்

திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் முகமது தவுபிக்ராஜா(வயது 23). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கடந்த மாதம் பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இரவில் அவர் அந்த பகுதியில் அமர்ந்து இருந்தபோது ஒரு கும்பல் முகமது தவுபிக் ராஜாவை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏற்கனவே 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

இந்நிலையில் இந்த கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரியமங்கலம் அம்மாகுளம் கலைவாணர் தெருவை சேர்ந்த ஆசைமுத்து(24), அம்மாகுளம் பாரதியார் தெருவை சேர்ந்த பாதுஷா (23), அரியமங்கலம் மலையடிவாரம் காந்திஜி தெருவை சேர்ந்த பாலாஜி (20), அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (20) ஆகிய 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். அதன்பேரில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார், சிறையில் உள்ளவர்களிடம் அதற்கான உத்தரவு நகலை வழங்கினர்.

மேலும் செய்திகள்