திருச்சி
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி கண்டோன்மெண்ட் கோரிமேடு சந்திப்பில் கடந்த 18-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற டீக்கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பறித்து தப்பியதாக பெறப்பட்ட புகாரின்பேரில் கருமண்டபம் மாந்தோப்பை சேர்ந்த கார்த்திக் (வயது 28), குளத்துக்கரையை சேர்ந்த கங்காதரன் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி திருச்சியை சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில், சந்திரசேகர் (29) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் கார்த்திக், கங்காதரன் ஆகியோர் மீதுபெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும், சந்திரசேகர் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்ததால், இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 3 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.