< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
7 Dec 2022 2:27 AM IST

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளியை சேர்ந்தவர் சீனா என்ற சீனிவாசன்(வயது 27). இவரும் சந்தப்பள்ளியை சேர்ந்த சேகர்(28) என்பவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான 1,070 கிலோ புகையிலை பொருட்களை வெங்காய மூட்டைகளுக்கு இடையில் மறைத்து வைத்து விற்பனைக்காக எடுத்து வந்தனர். திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் சஞ்சீவி நகர் சந்திப்பு அருகே வந்தபோது, வெங்காயம மூட்டைகளை கோட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில், இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின்படி, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள சீனா என்ற சீனிவாசன் மற்றும் சேகர் ஆகியோரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்