கள்ளக்குறிச்சி
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சங்கராபுரம் அருகே பிரம்மகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் தனக்கோட்டி மகன் மாணிக்கவேல் (வயது 33). சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக இவரை வடபொன்பரப்பி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (53) என்பவரை கச்சிராயப்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 2 பேர் மீதும் சாராயம் கடத்தல், விற்பனை செய்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களின் இத்தகைய செயலை தடுக்கும் வகையில், மாணிக்கவேல், சின்னதுரை ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பரிந்துரை செய்தார். இதையடுத்து சின்னதுரை, மாணிக்கவேல் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் இருந்து சின்னதுரை, மாணிக்கவேல் ஆகியோரிடம் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர். .கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.