< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|9 Aug 2022 1:14 AM IST
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் பகுதியை சேர்ந்தவர்கள் மன்மதராசா(வயது 22), கமரன்(22). இவர்கள் கடந்த ஜூன் மாதம் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில் மன்மதராசா, கமரன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.